நாட்டில் போதைப்பொருள் தட்டுப்பாடு : மாற்று வழிகளை நாடும் பாவனையாளர்கள்
Sri Lanka Police
Sri Lanka
Drugs
By Sathangani
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சோதனைகளால், நாட்டில் போதைப்பொருளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் போதைப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் வேறு மாற்று முறைகளை நாடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
போதைப்பொருள் போன்ற மருந்துகளை
இந்நிலையில் மருந்தகங்களில் அதிக விலைக்கு அதுக்கு ஏற்றால் போல் பொதியாகும் வகைகளை சார்ந்த மருந்துகளை வாங்கிச் செல்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அதிக விலைக்கு விற்பனை செய்த பல மருந்துக் கடைகளின் உரிமையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 9 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்