நாட்டில் விசேட போதைப்பொருள் சோதனை - வானூர்தி மூலம் கண்காணிப்பு(படங்கள்)
கொழும்பில் இன்று (29) காலை 6 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சோதனையில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது அண்மைய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட தனித்துவமான நடவடிக்கை என காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
விமானப்படை, காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் சிறிலங்கா இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்த இந்த நடவடிக்கை சில வாரங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.
இன்றைய சோதனை
கைது செய்யப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலர் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இன்றைய சோதனையில் 1 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 1 கிலோ கஞ்சாவும் கண்டுபிடிக்கப்பட்டதாக நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
மேலும் , தெற்கிலும் விசேட அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.