களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மட்டக்களப்பில் கைது
களுத்துறை நாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் பேருந்து ஒன்றில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (09) இரவு விசேட அதிரடிப்படையினர் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து வாழைச்சேனை சிறப்பு அதிரடிப்படையினர் மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த 16.01.2023 திகதி 9 மில்லி மீற்றர் ரக கைதுப்பாக்கி ஒன்று, மகசீன் ஒன்று, தோட்டாக்கள் 3, எஸ்.எப்.ஜி. 87 ரக கைகுண்டு ஒன்றுடன் களுவாஞ்சிக்குடி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |