அமெரிக்காவை தாக்கிய இசாயாஸ் சூறாவளி! பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
அமெரிக்காவை தாக்கிய இசையாஸ் சூறாவளியால் அந்நாட்டின் பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
இந்த தாக்கத்தால் நான்கு பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பணியில் ஈடுபட்டிருந்த அவசரக்காலப் பணியாளர் ஒருவர் மீது மரக்கிளை ஒன்று விழுந்த அதிர்ச்சியூட்டும் காணொளிக் காட்சியினையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகள்
அந்நாட்டின் புளோரிடா பான்ஹேண்டில் பகுதியில், இதன் தாக்கம் அதிகமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து 30 நிமிடங்கள், மணிக்கு 85 முதல் 105 மைல்கள் (சுமார் 136 - 169 கி.மீ.) வரை புயல் தீவிரமடைந்ததாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் பொது நிறுவனங்கள் உடனடியாக மூடப்பட்டுள்ளன. தாழ்வான மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அலபாமா மற்றும் புளோரிடாவைத் தொடர்ந்து, இந்தச் சூறாவளியின் தாக்கம் அடுத்ததாகப் பென்சில்வேனியா உள்ளிட்ட ஏனைய மாகாணங்களையும் நோக்கி நகரும் என்பதால், மீட்புக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |