என் மகனை திருத்தி தாருங்கள்..! காவல்துறையினரிடம் கெஞ்சிய தாய் - யாழில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kanna
தாவடி தெற்கு பகுதியில் நீண்ட காலமாக கேரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்தரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
தாயார் முன்வைத்த கோரிக்கை

இதேவேளை, கைது செய்யப்பட்ட நபரின் தாயார் இவரை திருத்தி தருமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
28 வயதான இளைஞன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளுடன் நீண்ட காலமாக தொடர்பை பேணி வந்துள்ளார்.
அத்தோடு போதை பொருள் விற்பனையை பிரதான தொழிலாக கொண்டு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி