பாடசாலை மாணவர்கள் மத்தியில் தீவிரமடையும் போதைப்பொருள் பாவனை!
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளமை பாரதூரமானது என உணவு பாதுகாப்பு மற்றும் வணிக, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும், அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் போதைப்பொருள் ஒழிப்புக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அநுராதபுரம் (Anuradhapura) பகுதியில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
போதைப்பொருள் வர்த்தகம்
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ''போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கைகள் சகல அமைச்சு மற்றும் திணைக்கள மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளமை பாரதூரமானதுடன், துரதிஸ்டவசமானது. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் வியாபாரத்துக்குமிடையில் அரசியல் தொடர்பிருப்பதாக கடந்த காலங்களில் குறிப்பிடப்பட்டது.
எமது அரசாங்கத்துக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.இதனால் தான் போதைப்பொருள் ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் ஒழிப்புக்கு கல்வி அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
