கிரிந்த கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்: சந்தேகநபர்கள் கைது!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Law and Order
By Kanooshiya
கிரிந்த கடற்கரையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருளை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் படகொன்றுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்காலை பகுதியில் நேற்று (15.11.2025) இந்த கைது இடம்பெற்றுள்ளது.
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
கிரிந்த, அந்கலவெல்ல கடற்கரையில் 300 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் எட்டு சந்தேகநபர்கள் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை 7 நாட்கள் விசாரணைக்காக தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, குறித்த சந்தேகநபர்களின் சொத்துக்கள் தொடர்பில் காவல்துறையினர் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |