மாற்றங்களுடன் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : தலைமை குறித்தும் அறிவிப்பு
இந்தியன் ப்ரீமியர் லீக் 2026 ஆம் ஆண்டுக்கான தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் பத்து வீரர்களை விடுவித்துள்ளது.
இதில் ஜடேஜாவுக்கு பதில் சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது.
சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக சஞ்சு சாம்சன் பதவி வகித்திருந்ததுடன் காயம் ஏற்பட்டதாக கூறி தலைமை பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினுள் உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்பட்டுள்ளதால் அணியின் புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பான எழுந்த விவாதங்களுக்கு தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், .எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |