வெளிநாடொன்றில் தொண்டு நிறுவனம் வழங்கிய சாக்லேட்டில் போதைப்பொருள்
நியூசிலாந்தில் (New Zealand) தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய இனிப்பு பண்டங்களில் ஆபத்து மிகுந்த போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூசிலாந்தில் வறுமை ஒழிப்பு தொண்டு நிறுவனம் ஒன்று பகிர்ந்தளித்த அண்ணாச்சி பழ இனிப்பில் ஆபத்தான மெத்தம்பேட்டமைன் (methamphetamine) என்ற போதைப்பொருள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த இனிப்பு பண்டத்தை உடனடியாக பயன்பாட்டில் இருந்து தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போதைப்பொருள்
இந்நிலையில், நியூசிலாந்து போதைப்பொருள் நிறுவனம், பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட மஞ்சள் நிற தாளில் சுற்றப்பட்ட வெள்ளை நிற இனிப்பில் மெத்தம்பேட்டமைன் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இனிப்பில் அன்னளவாக 3 கிராம் மெத்தம்பேட்டமைன் இருப்பதாகவும், இது பயனர்கள் எடுத்துக் கொள்ளும் அளவை விட 100 மடங்கு அதிகமானது எனவும் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த தொண்டு நிறுவனத்திடம் விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், போதைப்பொருள் உள்ளடங்கிய இனிப்புகள் தரமாக அடைக்கப்பட்ட பைகளில் அடையாளம் தெரியாத நபரால் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |