புதிய உச்சத் தலைவரான கமேனியின் மகன்! ஈரான் புரட்சிகர காவல்படை எடுத்த சபதம்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ( IRGC) புதிய உச்சத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா கமேனிக்கு வாழ்த்து தெரிவித்து, அவருக்கு வாழ்நாள் முழுவதும் விசுவாசமாக இருப்பதாக என்று அறிவித்துள்ளது.
அந்நாட்டு ஊடகங்களில் வெளியான அறிக்கையில், புரட்சிகர காவல்படை, மொஜ்தபா கமேனி வழங்கும் உத்தரவுகளை முழுமையாகக் கேட்டு செயல்படுத்த தயாராக இருப்பதாகவும் என்று தெரிவித்துள்ளது.
புதிய தலைவருக்கான ஆதரவு
இந்த நிலையில், ஈரானின் அடுத்த உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுத்த 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் குழு தீர்மானமான வாக்கெடுப்பின் மூலம் மொஜ்தபா தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.

அதன்படி, அனைத்து ஈரானியர்களும் குறிப்பாக மதப்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள அறிஞர்கள் உட்பட அனைவரும் புதிய தலைமையை ஆதரித்து ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |