யாழில் சீட்டுப் பண விவகாரத்தில் பயங்கரம்: குடும்பஸ்தர் மீது கொடூரத் தாக்குதல்
யாழில் சீட்டு காசு கொடுக்காததால் குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (30-04-2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உடுவில் நாகம்மாள் கோவிலுக்கு அருகாமையில் வசிக்கும் பெண்ணொருவர் சீட்டு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார்.
கொடூர தாக்குதல்
இந்நிலையில் ஆலடி பகுதியைச் சேர்ந்த ஆணொருவரும் அவரிடம் சீட்டு கட்டி வருகின்றார்.

அந்தவகையில் ஆலடி பகுதியை சேர்ந்த குறித்த நபருக்கு சீட்டு விழுந்துள்ளது.
இருப்பினும் அந்த பணத்தை கொடுக்காத காரணத்தால் சீட்டு பிடிக்கும் பெண்ணின் கணவரை கடத்திச் சென்ற குழுவானது அவர்மீது கொடூர தாக்குதலை நடாத்திவிட்டு திரும்பி வந்துள்ளது.
வீதி கடமை
இதன்போது வீதி கடமையில் இருந்த சுன்னாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிந்த நிலையில் குறித்த தாக்குதலை நடாத்தியவர்களை கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |