ஈரான் போர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுக்கும் நாடுகள்...! ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை
ஈரான் போர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுக்கும் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அங்கிருக்கும் அமெரிக்க இராணுவ இருப்பை மறு ஆய்வு செய்யப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறைப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஈரான் விவகாரத்தில் அவர்கள் எங்களுக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்கப் படை
ஏற்கனவே ஜெர்மனியில் உள்ள படைகளைக் குறைப்பது குறித்தும் தான் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இத்தாலி எவ்வித உதவியும் செய்யவில்லை என்றும் ஸ்பெயினின் அணுகுமுறை மிகவும் மோசமாக இருப்பதாகவும் சாடிய ட்ரம்ப், உதவி செய்யாத நாடுகளுக்காக அமெரிக்கப் படைகளை அங்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான போரில் இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவை வழங்கத் தவறிய ஐரோப்பியத் தலைவர்களுடன் ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள இந்த விரிசல், நேட்டோ கூட்டமைப்பிற்குள்ளும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவக் குறைப்பு
குறிப்பாக, ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் மீதான தனது விமர்சனத்தை ட்ரம்ப் மீண்டும் முன்வைத்துள்ளார்.
இந்தநிலையில் அவர்கள் முன்வந்து உதவ முன்வருவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் மெர்ஸ் மிகவும் மோசமாகச் செயல்படுகிறார் என அவர் சாடியுள்ளார்.

முன்னதாக ஈரானால் அமெரிக்கா அவமானப்படுத்தப்படுவதாக மெர்ஸ் குறிப்பிட்டிருந்த போதிலும் ட்ரம்புடன் தனது உறவு சீராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ட்ரம்பின் இந்த இராணுவக் குறைப்பு எச்சரிக்கையானது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புச் சூழலில் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |