மீண்டும் மொட்டுக்கட்சியின் ஆட்சி உறுதி...! சூளுரைக்கும் முக்கிய புள்ளி
தேசிய மக்கள் சக்தி அரசு, ஒட்டுமொத்தமாகக் கலைந்து வீட்டுக்குச் செல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தற்போதைய அரசு பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் நம்பிக்கை
இந்த அரசு மக்களின் நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் முறையற்ற நிர்வாகத்தால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் விரைவில் இந்த அரசு பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் பலத்துடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் பலமான முறையில் ஆட்சியமைப்பது உறுதி என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |