சீனாவை நிர்ப்பந்தித்த ட்ரம்ப்!! உடன் பதிலடி கொடுத்தது சீனா
கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் நஷ்ட ஈடாக 10 ட்ரில்லியன் டொலர்கள் சீனா கொடுக்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.
அத்துடன், கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் வெளியே கசிந்தது என்று நான் கூறியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலர் என்னை கடுமையாக விமர்சித்தனர்.
அமெரிக்காவில் கூட எனது வாதத்திற்கு எதிர் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் நான் கூறிய குற்றச்சாட்டு உண்மை தான் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் வந்த வண்ணம் உள்ளன.
சீனா தான் காரணம் என்பதை தற்போது அனைவரும் உணரத் தொடங்கி விட்டனர்.
சீன வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பலத்த சேதத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இதற்காக சீனா 10 ட்ரில்லியன் டொலர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
அமெரிக்கா மற்றும் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் நஷ்ட ஈடாக 10 ட்ரில்லியன் டாலர்கள் சீனா கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், ட்ரம்ப் மீண்டும் மீண்டும் உண்மைகளை புறந்தள்ளுகிறார்.
பெருந்தொற்றை கையாள்வதில் தனக்கு இருந்த பொறுப்பை தட்டிக்கழிப்பதோடு மக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்கிறார்.
மக்களின் வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் புறக்கணித்த பாசாங்குத்தனாமான அரசியல்வாதிகளையே பொறுப்பாக்க வேண்டும் என பதில் வழங்கியுள்ளார்.