இலங்கையில் வறட்சியினால் 20 மாவட்டங்கள் பாதிப்பு
இலங்கையில் தென்மேற்கு பகுதிகளில் தற்போது கடும் மழை பெய்து வருகின்ற போதிலும், கிழக்கு, வடக்கு, வடமேற்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் வறண்ட காலநிலையே காணப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
279,892 பேர் இந்த வறண்ட காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை நாட்டில் 20 மாவட்டங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், வறண்ட காலநிலையினால் 60,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பயிர் சேத மதிப்பீடு
[T9S4W ]
அதிகளவாக குருநாகல் மாவட்டமே வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி தலைவர் எம்.பி.வீரசேகர, பயிர் சேத மதிப்பீடுகள் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.