இரட்டை குடியுரிமை விவகாரம்..! இன்று விசாரணை: வெளியான தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை குடியுரிமை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளை இன்று நிறைவு செய்ய முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் பிறந்த தினம், தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்ற விபரங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அண்மையில் நாடாளுமன்ற செயலாளரிடம் கோரியது.
இந்த விபரங்கள் கிடைத்த பின்னர், ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளை இன்று நிறைவு செய்ய முடியும் என நம்புவதாக திணைக்களம் கூறியுள்ளது.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள்

அந்தவகையில், இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இரட்டை குடியுரிமை பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை மூடி மறைக்கும் முயற்சிகள் நடப்பதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.