கோடிஸ்வர வர்த்தகர்களுக்கு நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய டட்லி
ட்டலி சிறிசேன கொழும்பில் இருந்து வந்து பொலன்னறுவையில் ஹோட்டல் கட்ட முயற்சித்த கோடிஸ்வர வர்த்தகர்களுக்கு நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து உங்களுக்கு பொலன்னறுவையில் ஹோட்டல் கட்ட முடியாது நீங்கள் கொழும்பில் கட்டிக் கொள்ளவும் என்று அண்ணனின் அரசியல் பலமும் அடாவடித்தனத்தால் மிரட்டி அனுப்பியவர் என முன்னணி சோஷலிச கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் இந்திரானந்த த சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பொலன்னறுவை குளத்தை அண்டி கட்டப்பட்டுள்ள கோடிஸ்வர வர்த்தகர் டட்லி சிறிசேனவின் சுது அரலியா ஹோட்டலை அண்டி 7000 சது அடி பரப்பளவான காணி அடாத்தாக கைப்பற்றப்பட்டுள்ளது.
டட்லி சிறிசேன
அதை முடிந்தால் அகற்றுமாறு லால்காந்தவுக்கு சவால் விடுத்துள்ளார். பொலன்னறுவை நீர்ப்பாசன திணைக்களத்தின் அத்தியட்சகரிடம் இது தொடர்பில் கேட்டு எந்தவித பலனும் இல்லை.
ஏனென்றால் அவர் டட்லி சிறிசேனவின் நிழலில் வாழ்ப்பவர்.அவர் அமைச்சர் லால் காந்தவை ஏமாற்றலாம், ஆனால் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.
அமைச்சர் லால்காந்த கூட பொன்னறுவை வந்த போது சுது அரலியா ஹோட்டலில் குடித்து குதுகளித்திருக்கலாம்.
அண்மையில் இலங்கையின் முக்கிய குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் அனைத்துக் கட்டிடங்களும் அகற்றப்படும் என அமைச்சர் லால்காந்த ஒரு நிகழ்வில் தெரிவித்திருந்தார்.
ஆனால் டட்லி சிறிசேனவின் ஹோட்டல் குளத்தின் எல்லைப்பகுதியில் இல்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
