துமிந்த திசாநாயக்கவுக்கு எதிரான தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி வழக்கு : ஜனவரியில் விசாரணை
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை ஜனவரி 29ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹெவ்லொக் டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டது.
சாட்சிகளுக்கு அழைப்பாணை
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு முந்தைய கலந்தாய்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க விசாரணைத் திகதியை நிர்ணயித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |