5 கொலைகள் : பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 07ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (23) உத்தரவிட்டார்.
2008ஆம் ஆண்டு கல்லடியில் காவல் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை, வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடா்பிலேயே இவர்கள் கைதாகியுள்ளனர்.
உத்தரவு
இந்நிலையில் இன்று இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதுடன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிள்ளையானை காணொளி மூலம் முன்னிலைப்படுத்த முடியவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் எழுத்து மூலமான ஆவணத்தை சமர்ப்பித்திருந்தனர்.
இதேவேளை இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபரான லண்டனில் உள்ள பாயிஸ் என்றழைக்கப்படும் முகமட் பாய்ஸ் கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறையினயினரிடம் அதற்கான பிடியாணை கடிதத்தை நீதிமன்ற அனுமதியை பெற்று சர்வதேச ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிஜடியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு
பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் புத்தாண்டுக்குப் பிறகு புதிய தாக்குதல்கள்..! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை