விண்ணைத் தொடும் காய்கறி விலை: கடும் சிரமத்தில் மக்கள்
காய்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள கணிசமான உயர்வு, காய்கறி விற்பனையாளர்களையும் நுகர்வோரையும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இதன் விளைவாக, குடைமிளகாய் ஒரு கிலோகிராம் ரூ. 950 முதல் ரூ. 1,000 வரையிலும் கத்தரிக்காய் ரூ. 500, பச்சை மிளகாய் ரூ. 800, அவரைக்காய் ரூ. 450, மற்றும் கேரட் ஒரு கிலோகிராம் ரூ. 600 முதல் ரூ. 700 வரையிலும் விற்கப்படுகின்றது. மேலும், மற்ற விளைபொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
அதன்படி, பூசணிக்காய் ரூ. 400, வாழைக்காய் ரூ. 400, முட்டைக்கோஸ் ரூ. 600 முதல் ரூ. 650 வரையிலும், வெள்ளரிக்காய் ரூ. 350, தக்காளி ரூ. 800, பாகற்காய் ரூ. 800, புடலங்காய் ரூ. ஒரு கிலோகிராம் எலுமிச்சை ரூ. 600-க்கும், நுவரெலியா உருளைக்கிழங்கு ரூ. 450க்கும் விற்கப்படுகிறது.
கடுமையான பாதிப்பு
மேலும், எலுமிச்சை ஒரு கிலோகிராம் ரூ. 2,000க்கும், சிவப்பு வெங்காயம் ஒரு கிலோகிராம் ரூ. 800க்கும் சில்லறை விலையில் விற்கப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீப நாட்களாக நாடு முழுவதும் பெய்த கனமழையால் காய்கறிப் பயிர்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, விவசாயிகளால் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
விலை உயர்வால் நுகர்வோர் காய்கறி வாங்குவதைக் குறைத்துள்ளதால், தங்களது வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பகுதி காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |