இலங்கையில் போலி இரத்தினக்கற்கள்
corona
sri lanka
people
By Shalini
செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட போலி இரத்தினக்கற்கள் சந்தைக்கு வந்துள்ளமையால் தொழிற்துறை சார்ந்தோர் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகப் பிரசித்தி பெற்ற இயற்கை இரத்தினக்கற்களுக்கு இரத்தினபுரி பிரதேசம் புகழ் பெற்று விளங்குகிறது.
இப்பிரதேசத்தில் கிடைக்கும் நீலம் சிவப்பு ஆர்நூல் புஷ்பராகம், மரகதம், வைரோடி, பத்மராகம், கெவுடா பசிங்கல் போன்ற இரத்தினக்கற்கள் போன்றே இந்த போலி இரத்தினக்கற்களும் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்