இலங்கை - அமெரிக்க பேச்சுவார்த்தையில் மக்களுக்கான மகிழ்ச்சி தகவல்
இலங்கை–அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு வரி விலக்கு வழங்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக சமநிலை பெரும்பாலும் இலங்கைக்கு சாதகமாக இருப்பதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தபட்டால் டெஸ்லா உட்பட உயர்தர மின்சார வாகனங்கள் மற்றும் Ford, Chevrolet, Jeep போன்ற பிரபலமான அமெரிக்க வாகனங்கள் வரி இல்லாமல் இலங்கை சந்தைக்கு நுழையலாம்.
நியாயமான விலை
உயர்தர தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய அமெரிக்க வாகனங்கள் அதிக வரி காரணமாக இதுவரை இலங்கை சந்தையில் குறைவாக இருந்த நிலையில், வரி சலுகை கிடைத்தால் மக்கள் நியாயமான விலையில் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிலையில், இலங்கை இதற்கான இறுதி ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசியல் வட்டாரங்கள் முன்மொழிவு படிப்படியாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளன.
மேலும், முன்பு டொனால்ட் ட்ரம்ப் விதித்த 44% வரி, இரு கட்டமாக 20% ஆகக் குறைக்கப்பட்டிருந்தாலும், அதற்கு மாறாக பயனுள்ள ஒப்பந்தங்கள் உள்ளனவா என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
