தலைவர் பிரபாகரனை சந்தித்த காணொளி: மற்றுமொரு உறவினர் வெளிப்படுத்தும் உண்மை (Video)
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவருக்கு 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுவது எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தலைவர் பிரபாகரனின் அண்ணன் மகன் மனோகரன் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், எங்களது சித்தப்பாவின் மகள் துவாரகாவைச் சென்று சந்தித்துவிட்டு வந்ததாக, எமது உறவினர் அருணா கூறினார்.
எனினும், துவாரகாவைச் சந்தித்ததற்கான எந்தவொரு புகைப்படங்களோ, காணொளிகளோ அவர் எடுத்திருக்கவில்லை.
இரண்டு காணொளிகள்
துவாரகா மற்றும் எனது சித்தப்பாவின் குடும்பத்தாரைச் சந்தித்து வந்துவிட்டதாகச் சொல்லி இரண்டு முறை அருணா காணொளிகளை வெளியிட்டிருந்தார்.
அதேவேளை, ஒருமுறையாவது அவர்களை சந்தித்ததற்கான புகைப்படங்களை வெளியிட்டிருக்கலாம். அல்லது அந்த செய்தியை எங்களோடு பகிர்ந்திருக்கலாம்.ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
நாங்கள் அழைத்தபோது அவர்களுடைய தொலைபேசி இயங்கவில்லை. இதன்காரணமாகத்தான் எமக்கு சந்தேகம் வலுக்கத் தொடங்கியது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளியிட்ட காணொளியில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சித்தப்பாவிற்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்தார். எனினும் அவர் வேறுசிலரிடம் சித்தப்பா மனநலம் பாதிப்படைந்து இருப்பதாக தெரிவித்து வருகிறார்.
இவ்வாறான சித்தரிப்பு செயற்பாடுகள் தலைவர் பிரபாகரனின் பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாக அமைகிறது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.