இணைய வணிகம் மூலம் அதிக அளவான நிதி மோசடி: 26 வயது சந்தேகநபர் கைது
இணைய வணிகம் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெலிகிராம் சமூக ஊடகம் மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர், இணைய வணிகத்தின் ஊடாகப் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 151,000 ரூபாவைச் சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடச் செய்து மோசடி செய்துள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, குறித்த மோசடியில் தொடர்புபட்டமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த இணைய வணிகத்தின் மூலம் 12,691,033 ரூபாயை ஈட்ட முடியும் எனச் சந்தேகநபர் டெலிகிராம் ஊடாகக் கூறியதாகவும், இதனை நம்பி முறைப்பாட்டாளர் 151,000 ரூபாவைச் சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியவெவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |