ஆப்கானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் வீதிகளில் தஞ்சம்
ஆப்கானிஸ்தானின் தென் கிழக்குப் பகுதியில், நேற்று (வியாழக்கிழமை) இரவு 9:56 மணியளவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இதில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3,600-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான கிராமங்கள் தரைமட்டமாகின. இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதே பகுதியில் கடந்த செய்வ்வாய்கிழமை மாலையும் 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் தென் கிழக்குப் பகுதியில், நேற்று (வியாழக்கிழமை) இரவு 9:56 மணியளவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
ஜெர்மன் புவியியல் ஆய்வு மையமான GFZ அறிக்கைப்படி, பூமியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டன. அதிர்வுகள் ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர்சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
