இலங்கையில் இரவு நேரம் ஏற்பட்ட கோர விபத்து : பத்துபேர் பலி பலர் ஆபத்தான நிலையில்
புதிய இணைப்பு
நேற்று (4) இரவு எல்ல-வெல்லவாய பிரதான சாலையில் 24வது கி.மீ தூணுக்கு அருகில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாகவும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பதுளை போதனா மருத்துவமனையில் 15க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரின் ஈடுபாட்டுடன் இன்னும் நடந்து வருகின்றன.
இரண்டாம் இணைப்பு
எல்ல-வெல்லவாய வீதியில் இன்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை சம்பவத்தில் 30 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் பிந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
எல்ல - வெல்லவாய வீதியில் இன்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் பேருந்து கவிழ்ந்து சுமார் 200 மீட்டர் பள்ளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எல்லவிற்கு சுற்றுலாவிற்காக சென்ற தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று இந்த விபத்தை சந்தித்துள்ளது.
சுற்றுலாவிற்கு சென்று திரும்பியவேளை அனர்த்தம்
சுற்றுலாவிற்கு சென்று மீண்டும் தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவத்தில் 20ற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
