ஆப்கானிஸ்தானில் தொடரும் துயரம்!! 1000 பேரை காவு கொண்ட பாரிய நிலநடுக்கம் (காணொளி)
Afghanistan
Earthquake
By Kanna
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 1000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும், 600 பேர் படுகாயமடைந்திருக்கலாம் என ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது .
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் (Khost) நகரிலிருந்து சுமார் 44 கிலோமீற்றர் தொலைவில் 51 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) குறிப்பிட்டுள்ளது.
ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை மேற்கோள்காட்டியதன்படி, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் தரவுகளுக்கு அமைய, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 500 கிலோமீற்றருக்கும் அதிகமான நில அதிர்வு உணரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி