ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலநடுக்கம் இன்று (19) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளிலும் தாக்கம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தெற்கே-தென்மேற்கு திசையில் 632 கிலோமீற்றர் தொலைவில் பாகிஸ்தானையொட்டிய பலோசிஸ்தானின் நுஷ்கி பகுதியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், பெரிதாக சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |