கனடாவுடன் கைகோர்த்த ஜேர்மனி: முன்னெடுக்கப்படும் பாரிய திட்டம்
கனடாவும் ஜேர்மனியும் எரிவாயு தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனி தனது எரிவாயுத் தேவைகளுக்காக பெரிதும் ரஷ்யாவை நம்பியிருந்த நிலையில், ரஷ்யா ஜேர்மனியை கைவிட்டது.
எரிவாயு ஏற்றுமதி
இந்நிலையில்,தனது எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜேர்மன் தற்போது வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கனடாவுடன் ஜேர்மன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி, கனடாவின் Newfoundland and Labrador மற்றும் Nova Scotia முதலான இடங்களில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் எரிவாயு, ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹைட்ரஜன் எரிவாயு
அத்தோடு, கனேடிய பெடரல் ஆற்றல் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சரான Jonathan Wilkinson, இந்த ஒப்பந்தம் தொடர்பான பணிகள், 2022ஆம் ஆண்டு ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்தபோதே ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த ஒன்றரையாண்டுகளாக இந்த விடயம் தொடர்பான பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இப்போது, கனேடிய பசுமை ஹைட்ரஜன் எரிவாயுவை வாங்க விரும்பும் ஜேர்மன் நிறுவனங்களையும், கனடாவின் Newfoundland and Labrador மற்றும் Nova Scotia முதலான இடங்களில் ஹைட்ரஜன் எரிவாயு தயாரிக்கப்படுவதையும் எப்படி ஒருங்கிணைப்பது என்பது குறித்த புரிதலை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |