நேபாளத்தில் அதிபயங்கர நிலநடுக்கம் : நூற்றுக்கணக்கானோர் பலி!
நேபாளத்தில் நேற்று (03) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந் நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அசைந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதனால் ருகும் மேற்கு பகுதியில் 36 பேர் உயிரிழந்துள்ள இதேவேளை இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஜஜர்கோட் பகுதியில் 34 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்து உள்ளனர்.
நேபாள பிரதமர் இரங்கல்
அவர்களில் படுகாயமடைந்த சிலர் சுர்கெத் பகுதிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் நிலநடுக்கத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இரங்கலை வெளிப்படுத்தி உள்ளதுடன் நிலநடுக்க பாதிப்பு பகுதிகளைப் பார்வையிடுவதற்காகப் புறப்படட்டுள்ளார்.
இதேவேளை இந்நிலநடுக்கம், வடஇந்தியாவின் டில்லி - என்.சி.ஆர், உத்தர பிரதேசம் மற்றும் பீகார் பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.