இந்து சமுத்திரத்தில் நிலநடுக்கம் : இலங்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இந்தியப் பெருங்கடலின் மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் பகுதியில் இன்று பிற்பகல் (24) ரிக்டர் அளவுகோலில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
இன்று மாலை சுமார் 4.36 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தரை மட்டத்திலிருந்து 10 கி.மீ. ஆழத்தில் (அட்சரேகை 17.78S மற்றும் தீர்க்கரேகை 65.82E) நிகழ்ந்ததாக, மாலை 5.10 மணிக்கு அந்த மையம் வெளியிட்ட நிலநடுக்க அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி அச்சுறுத்தல் இல்லை
எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது

நிலநடுக்கம் குறித்த அடிப்படைத் தகவல்கள் ரிக்டர் அளவு: 6.5 இடம்: இந்தியப் பெருங்கடல் (மொரிஷியஸ் / ரீயூனியன் பகுதி) தேதி மற்றும் நேரம்: 24 நவ. 2026, மாலை 04.36 மணி ஆழம்: 10 கி.மீ.
இந்த நிலநடுக்கம் காரணமாக, இலங்கையின் கடலோரப் பகுதிகளிலும் அதன் அருகாமையிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்துகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |