நியூ கலிடோனியாவில் பாரிய நிலநடுக்கம்!
earthquake
New Caledonia
By Thavathevan
நியூ கலடோனியா ( New Caledonia) தீவிற்கு அருகே பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஸ்திரேலியாவிற்கு இடையே இருக்கும் தெற்கு பசிபிக் கடலில் இன்று அதிகாலை 2.27 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 07 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
நியூ கலடோனியா தீவில் இருந்து 407 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி