இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாவில் இன்று (09) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவில் உள்ள தலாட் தீவுகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.18 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை பப்புவா நியூ கினியாவின் வடகடலோரப் பகுதியில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் இதனால் அந்நாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலகில் அதிகரித்த நிலநடுக்கம்
அண்மைக்காலமாக உலகின் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் சீனா மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாயின.
ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஆப்கானிஸ்தானிலும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Earthquake of Magnitude:6.7, Occurred on 09-01-2024, 02:18:47 IST, Lat: 4.75 & Long: 126.38, Depth: 80 Km ,Location: Talaud Islands,Indonesia for more information Download the BhooKamp App https://t.co/Ughl0I9JG3 @Indiametdept @ndmaindia @Dr_Mishra1966 @KirenRijiju @Ravi_MoES
— National Center for Seismology (@NCS_Earthquake) January 8, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |