ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இந்த ஆண்டில் பதிவான 3 ஆவது நிலநடுக்கம் என தெரிவிப்பு!
ஜப்பானின் குரில் தீவுகளில் இன்று (28) 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்ககளில் அதே பகுதியில் 5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் 10 கிமீ மற்றும் 40 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் பாதிப்பு
அடுத்தடுத்த இரு நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தாலும் ஜப்பானில் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இந்த நிலநடுக்கங்களில் எவரும் பலியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கங்கள்
இதேவேளை, கடந்த அக்டோபர் மாதம் ஜப்பானில் டோரிஷிமா தீவு அருகே 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
டோக்கியோவிற்கு தெற்கே 550 கிமீ (340 மைல்) தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.
Earthquake of Magnitude:6.3, Occurred on 28-12-2023, 14:45:12 IST, Lat: 44.36 & Long: 149.23, Depth: 10 Km ,Location: Kuril Islands, Japan for more information Download the BhooKamp App https://t.co/MC1PetvaMs@Dr_Mishra1966 @KirenRijiju @ndmaindia @Indiametdept pic.twitter.com/rFxNB31JgO
— National Center for Seismology (@NCS_Earthquake) December 28, 2023
அத்துடன், கடந்த ஜூன் மாதத்தில் ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள மேர்வின் சில்வா : புது யுகத்துக்குள் இலங்கை காலெடுத்து வைக்கும் எனவும் உறுதி!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |