நிலநடுக்கத்தினை முன்னறிவிக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
இன்றைய இருபத்தோறாம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் நம் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புக்கள் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.
அவை மக்களின் அன்றாட செயற்பாடுகளை இலகுவாக்குவதற்கும், உலக வாசிகளின் வாழ்வுக்கு நன்மை விளைவிப்பதாகவும் அமைகின்றது.
178 வருடங்களுக்கு பின்னர் அமாவாசை தினத்தில் வானில் ஏற்படவுள்ள நிகழ்வு : இலங்கையில் பார்க்க முடியுமா..!
நில அதிர்வு திறன்
அந்த வகையில், டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலநடுக்கத்தைக் கண்டறியும் அல்காரிதத்தை (Algorithm) வெற்றிகரமாக கண்டுபிடித்து சோதித்துள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி ஒரு வாரத்திற்கு முன்பே நிலநடுக்கம் இடம்பெறவிருக்கும் மண்டலத்தை அடையாளம் காண முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஏறத்தாழ 321KM தொலைவில் ஏற்படக்கூடிய நிலநடுக்கத்தின் அளவைக்கூட இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பு கணித்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவிகின்றனர்.
மேலும், அதன் துல்லியத்தை கணிப்பதற்காக, நில அதிர்வுகளின் திறன் அதிகம் உள்ள பகுதிகளான இத்தாலி, ஜப்பான் மற்றும் கிரீன்லாந்து போன்ற நாடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.