பூமியை நெருங்குகிறதா பிரளயம் - ஒரு கணம் சுற்றும் பூமி நின்றால்.... வெளியானது ஆய்வு!
பூமியின் மைய சுழற்சி நின்றால் என்ன நடக்கும் அழிவை ஏற்படுத்துமா பூமியின் உள் மையம் நின்றவுடன் பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்படுமா என்பது போன்ற விளைவு குறித்த தகவல்களையும், பூமி தொடர்பான பல ரகசியங்களையும் பிரபல விஞ்ஞானிகள் நாளுக்கு நாள் ஆராய்ச்சிகள் மூலம் வெளிக்கொணருகின்றார்கள்.
இவ்வாறான நிலையில், பூமியின் மையப்பகுதியின் சுழற்சி திசையில் மாற்றம் ஏற்படப் போவதாக விஞ்ஞானிகள் மற்றும் நில அதிர்வு நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.
எதிர்த்திசையில் சுழலத் தொடங்கும் பூமி
தொடர்ந்து பூமியை தேடும் பணியில், பூமியின் மையம் ஒரு நாள் சுழல்வது நின்றுவிடும் என்றும் சிறிது நேரத்திற்கு பூமி எதிர்திசையில் சுழலத் தொடங்கும் என்பதும் வெகு காலத்திற்கு முன்பே கூறப்பட்டு வருகிறது.
முதலில் பூமியில் உள் மையமானது சுழன்று கொண்டே இருக்கிறது என்பதை அறிவது அவசியம். சூடான மற்றும் திடமான இரும்பின் உள் கோளத்தின் சுழற்சியின் காரணமாக, பூமியில் காந்தப்புலம் மற்றும் ஈர்ப்பு உள்ளது.
Seismologists report that after brief but peculiar pauses, the inner core changes how it spins — relative to the motion of Earth’s surface — perhaps once every few decades. And, right now, one such reversal may be underway. https://t.co/Z0xp6xqjDJ
— NYT Science (@NYTScience) January 24, 2023
இந்த மையம் ஒரே திசையில் சுற்றுவதால், பூமியில் ஈர்ப்பு உள்ளது. இப்போது பூமியின் மையம் சுற்றுவதை நிறுத்தும். இது நடக்கும் முன், உள் மையம் சிறிது நேரம் சுழலும். நேச்சர் ஜியோசைன்ஸில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பூமியின் மையத்தின் சுழற்சி காரணமாக, மேற்பரப்பு நிலைத்தன்மையைப் பெறுகிறது.
சுழற்சி திசை மாற்றத்தால் ஆபத்தா?
ஒவ்வொரு 70 வருடங்களுக்கும் மையத்தின் சுழற்சியின் திசை மாறுகிறது. இந்த மாற்றம் சுமார் 17 ஆண்டுகளுக்குள் நிகழும் எனவும் பூமியின் மையம் எதிர் திசையில் சுழல ஆரம்பிக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பூமியின் மையத்தின் சுழற்சியின் திசையில் ஏற்படும் மாற்றத்தால், பூமி வெடிக்காது அல்லது எந்த ஒரு பேரழிவும் வராது. இச்சம்பவத்தால் பூமிக்கோ, இப்பூவுலகில் வாழும் உயிரினங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.
இது 1936 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது டச்சு நில அதிர்வு நிபுணர் இங்கே லெஹ்மன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.