உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநுர அளித்த உறுதி மொழி

Anura Kumara Dissanayaka Sri Lanka Easter Attack Sri Lanka
By Harrish Oct 06, 2024 11:26 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி  இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

2024 பொதுத் தேர்தல்: அநுர தரப்பிலிருந்து களமிறங்கவுள்ள புதிய முகங்கள்

2024 பொதுத் தேர்தல்: அநுர தரப்பிலிருந்து களமிறங்கவுள்ள புதிய முகங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

இன்று(06) காலை கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியின் வருகையை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநுர அளித்த உறுதி மொழி | Easter Attack Anura Statement

இதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இதன்போது நேரடியாக ஜனாதிபதியிடம் அவர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறியுள்ளனர்.

இந்நாட்டில் அண்மைய காலத்தின் மிக மோசமாக அழிவு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே நிகழ்ந்தது என்றும் அந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்களின் எதிர்பார்ப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களித்ததன் பின்னணியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாக  நான் நம்புகின்றேன்.

இந்நாட்டு மக்களின் நோக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் தான் கொண்டிருக்கும் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறுபட்டவை அல்ல.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மக்கள் எதிர்பார்க்கும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்பதுடன், அதற்கான முன்னெடுப்புக்கள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநுர அளித்த உறுதி மொழி | Easter Attack Anura Statement

இது தொடர்பிலான முழுமையான முடிவொன்றுக்கு வந்து, அந்த முடிவை அடிப்படையாக கொண்டு சாட்சிகளை திரட்டுவதுவதால் மாத்திரம் இந்த விசாரணைகளை கொண்டு நடத்த முடியாது, வெளிப்படைத் தன்மையுடன் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் மாற்றத்துக்காக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதுடன், அரசியலுக்காக நூற்றுக் கணக்கில் அப்பாவி உயிர்களை பலியிடுவது பாரிய அழிவாகும்.

அவ்வாறான நிலைப்பாடு நாட்டின் அரசியலுக்குள் காணப்படுமாயின் அந்த நிலைமையை முழுமையாக துடைத்தெறிய வேண்டும்.

மக்கள் மத்தியில் நிலவிய சந்தேகம்

இரண்டாவது விடயமாக அப்போதைய ஆட்சிப் பொறிமுறையும் இதனுடன் தொடர்புபட்டிருந்ததா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

அவ்வாறான நிலை மிகவும் பாதுகாப்பற்றது என்பதுடன் ஆபத்தானது, அதன்படி இதற்குள் நடந்தது என்னவென்பதை கண்டறிய வேண்டியது மிக அவசியமாகும்.

அடுத்தபடியாக, 274க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை பறித்த மற்றும் பெருமளவானவர்களை காயத்துக்கு உள்ளாக்கிய அழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்புக்குரியவர்கள் மீது கொண்டிருக்கும் அன்புக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநுர அளித்த உறுதி மொழி | Easter Attack Anura Statement

அதேபோல் இவ்வாறான பிரச்சினையினால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்பிலிருந்து சமூகத்தை பாதுகாத்தமைக்காக மதகுருமார்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.” என அவர்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமூகத்திற்குள் காணப்பட்ட இணைவு, ஒருமைப்பாடு, நம்பிக்கை சிதைந்து போயிருப்பதாகவும் மற்றுமொரு சமூகத்தின் மீது குரோதத்துடன் பார்க்கும் நிலை உருவாவது சமூக நல்வாழ்விற்கு மிகப்பெரிய ஆபத்தெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து நியாயமான விசாரணையொன்றை நடத்த வேண்டியது அவசியமாகும் என்பதையும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கடந்துபோன 05 வருடங்களில் ஒவ்வொரு ஏப்ரல் 21 ஆம் திகதியும் வீதிகளிகளிலும் சந்திகளிலும் ஒன்றுகூடிய மக்கள் அவர்களின் மனதிலிருந்த நீதி தொடர்பிலான எதிர்பார்ப்புக்களையே வெளிப்படுத்தினர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு

மேலும், இங்கு கருத்து தெரிவித்த கொழும்பு பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த போதும் அதற்கான நியாயம் கிடைக்கவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கங்களினால் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டாலும் பிரச்சினைக்கு காரணம் என்னவென்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநுர அளித்த உறுதி மொழி | Easter Attack Anura Statement

இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது நம்பிக்கை உள்ளதுடன் அவரின் நேர்மையை பாராட்டுகிறோம்.

அந்த நேர்மையை மக்கள் மத்தியில் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என்று நம்பிக்கை உண்டு.

அதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவார் என்ற நம்பிக்கையும் உண்டு.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்நிகழ்வில் கட்டுவாப்பிட்டிய தேவாலய பொறுப்பாளர் அருட்தந்தை மஞ்சுள நிரோஷன் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர்.

லண்டன் - கொழும்பு விமான சேவை: சிறிலங்கன் ஏர்லைன்ஸ் எடுத்த தீர்மானம்

லண்டன் - கொழும்பு விமான சேவை: சிறிலங்கன் ஏர்லைன்ஸ் எடுத்த தீர்மானம்

வடக்கு தொடருந்து சேவையில் தடங்கல்....! வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கு தொடருந்து சேவையில் தடங்கல்....! வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025