கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினர் மூலம் ஈஸ்டர் தாக்குதல் - யாழில் ஹக்கீம் எழுப்பிய சந்கேம்

Easter Jaffna Rauf Hakeem Sri Lanka
By Jaso Sep 10, 2022 08:29 PM GMT
Report

கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினர்

ஈஸ்டர் தாக்குதல் மூலம் இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுருவி விட்டதான மாயையை காட்டுவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினரை இந்த நாட்டின் உளவுத்துறையே பயன்படுத்தியதா என்கிற பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதே ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினர் மூலம் ஈஸ்டர் தாக்குதல் - யாழில் ஹக்கீம் எழுப்பிய சந்கேம் | Easter Attack By Mercenaries

40 வருடங்களுக்கு மேலாக நீதி நியாயத்தை எதிர்பார்த்து போராடிய அனைத்து தரப்புகளுமே பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். சர்வதேச நாடுகளும் மனித நேய அமைப்புகளும் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தங்களை கொடுத்த போதும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் எதையும் செய்ததாக இல்லை.

போலியான கருத்து உருவாக்கம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவது தொடர்பாக அழுத்தங்கள் உருவாகியுள்ள நிலையில் உள்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக ஏற்பட்ட போராட்டங்களுக்கு பின்னர் ஒரு சூழல் உருவாகியுள்ளது. தற்போதுள்ள அரசாங்கம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களையும் அடக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை பாவிக்கின்ற நிலைமை உருவாகி உள்ளது. இது அவசரமாக தடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஒவ்வொரு கட்டத்திலும் பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாமல் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்கிற போலியான கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலை நியாயப்படுத்துவதற்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துகின்றனர். இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுருவி விட்டதான மாயையை காட்டுவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினரை இந்த நாட்டின் உளவுத்துறையே பயன்படுத்தியதா என்கிற பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

அப்பாவி இளைஞர்கள் தண்டிப்பு

இவ்வாறான சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் இதற்காக அப்பாவி இளைஞர்கள் தண்டிக்கப்படுவதும் நிரபராதிகள் கொல்லப்படுவதற்கும் இந்த சட்டம் வழிகோலுகிறது.

கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினர் மூலம் ஈஸ்டர் தாக்குதல் - யாழில் ஹக்கீம் எழுப்பிய சந்கேம் | Easter Attack By Mercenaries

திடீர் மரண விசாரணை இல்லாமல் சடலங்களை கொண்டு சென்று புதைக்கலாம் என்கிற விடயத்தை கூட அவசர காலச் சட்டத்தில் அதற்குரிய ஏற்பாடுகளை புகுத்தி கடந்த காலங்களில் செய்தனர். தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எழுச்சியை அடக்குவதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவிக்கின்ற நிலைமை காணப்படுகிறது.

அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படும்போது மிக விரைவில் இந்த கொடிய சட்டத்தை நாட்டின் சட்ட புத்தகத்திலிருந்து அகற்றுவதற்கு வாய்ப்பு கிட்டும் - என்றார் 

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்