உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : வாயே திறக்காத பிள்ளையான் ! சட்டத்தரணி கம்மன்பில பகிரங்கம்
உயிர்த்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான்(pillayan) எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை என அவரது சட்டத்தரணி உதய கம்மன்பில(udaya gammanpila) குறிப்பிட்டார்.
தான் பிள்ளையானை அவரது சட்டத்தரணி என்ற வகையில் சந்தித்தாக தெரிவித்த அவர் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் தாம் அரைமணிநேரம் உரையாடியதாக கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான்
இதன் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை எனவும் அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற காலத்தில் பிள்ளையான் சிறையில் இருந்ததாக கூறிய உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பிள்ளையானோடு தொடர்புபடுத்துபவர்களின் மூளையை பரிசோதிக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
