அரசியல் திசையை நோக்கிச் செல்லும் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு! 16-வது குற்றவாளி அளித்த வாக்குமூலம்

Sri Lanka Easter Attack Sri Lanka
By Dharu Sep 22, 2026 09:25 PM GMT
Report

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில்  16-வது சந்தேகநபரான முகமது முஸ்தபா முகமது ஹாரிஸ், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து வெளிப்படையான நீதிமன்றத்தில் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவர்,  நான் 161 அம்சங்களைக் கொண்ட எழுத்துப்பூர்வமான அறிக்கையைச் சமர்ப்பித்தேன் என்றும், அதை அவர்கள் பரிசீலித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. எவ்வாறாயினும், இந்த வழக்கு அரசியல் திசையை நோக்கிச் செல்கிறது எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து

ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து

எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்பு 

 "நான் 10 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தில் எனது தரப்பு உண்மைகளை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்தேன். ஆனால் தீர்ப்பு வெறும் 2 நிமிடங்களில் வழங்கப்பட்டது.

அரசியல் திசையை நோக்கிச் செல்லும் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு! 16-வது குற்றவாளி அளித்த வாக்குமூலம் | Easter Attacks Confession Given By 16Th Accused

நாங்கள் சமர்ப்பித்த எழுத்துப்பூர்வமான தகவல்களை அவர்கள் வாசித்தார்களா என்பதுதான் எங்களுக்குள்ள ஒரே கேள்வி. குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதி மட்டுமே என்னிடம் இருந்தது.

வீட்டில் வெடிபொருட்கள் இருந்தன என்பது மட்டுமே என் மீதான ஒரே குற்றச்சாட்டாக இருந்தது. வீடு கட்டுவதற்காகக் கல் குவாரியிலிருந்து கற்கள் கொண்டு வரப்பட்டன. அந்தக் குவாரி உரிமையாளரின் தொடர்பு எண் என் கைப்பேசியில் இருந்தது. குவாரி உரிமையாளரை அச்சுறுத்தியே அவர்கள் அதற்கான ஆதாரத்தைப் பெற்றனர். நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

ஆனாலும் கைது செய்யப்பட்டேன். நான் கைது செய்யப்பட்டபோது என் மகளுக்கு வயது இரண்டுதான். என் மூத்த மகளுக்கு வயது ஏழு.

நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஒருவர் எனக்கு எதிராகச் சாட்சியம் அளித்தார்; அது தொடர்பாக நான் 161 அம்சங்களைக் கொண்ட எழுத்துப்பூர்வமான அறிக்கையைச் சமர்ப்பித்தேன்.

அதை அவர்கள் பரிசீலித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. எவ்வாறாயினும், இந்த வழக்கு அரசியல் திசையை நோக்கிச் செல்கிறது. எனது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளைக் கருத்தில் கொண்டு, எனக்கு விதிக்கப்படும் தண்டனையில் கருணை காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : இன்றிரவு வரப்போகும் தீர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : இன்றிரவு வரப்போகும் தீர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026