சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அநுர அரசின் அதிரடி தீர்மானம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டு இந்த மாதத்திற்குள் இறுதித் தீர்வு எட்டப்படும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன(Chrishantha Abeysena) தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு நாள் அல்லது ஒரு மாதத்தில் தாக்குதலுக்கான உண்மையான நீதியை நிலைநாட்ட முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய(17.03.2025) அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் கிருஷாந்த அபேசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. ஒரு அரசியல் படுகொலை. அதில் அரசியலும் ஈடுபட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்ததாகவும், அதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருந்ததாகவும் நாங்கள் கூறினோம்.
இப்போது 6 ஆண்டுகளை நெருங்கியும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இது ஒரு எளிதான காரியம் அல்ல என்பதை நாங்கள் அறிவோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நல்லாட்சி அரசாங்கத்தின் போது நடந்தது. நல்லாட்சி காலத்தில் யார் ஆட்சியில் இருந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
முறையான விசாரணை
நல்லாட்சி காலத்தில் காவல்துறை அமைச்சர் யார் என்பதும் எங்களுக்குத் தெரியும். அவர்கள் எதுவும் செய்யவில்லை.
எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, அது எல்லாவற்றையும் விசாரிக்கத் தொடங்கியது. நாம் பாதியிலேயே விசாரித்துவிட்டு வழக்குப் பதிவு செய்ய முடியாது.
நாம் முழுமையாக விசாரிக்க வேண்டும். விசாரணை முறையாக நடத்தப்படும், ஆதாரங்கள் தொகுக்கப்படும், மேலும் அது சட்டமா அதிபர் துறையிடம் சமர்ப்பிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்