அடிபணிய மாட்டோம்..! கம்மன்பிலவுக்கு அநுர அரசு அதிரடி பதிலடி

2019 Sri Lanka Easter bombings Anura Kumara Dissanayaka Easter Attack Sri Lanka Udaya Gammanpila
By Thulsi Oct 22, 2024 08:10 AM GMT
Report

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவையும் ஷானி அபேசேகரவையும் எக்காரணத்துக்காகவும் பணி நீக்கம் செய்ய மாட்டோம் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் (Udaya Gammanpila) நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர்  குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயாக்க எந்த தவறும் செய்ய வில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் பதவிக்கு ஆபத்து: மறைக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்ட கம்மன்பில

ஜனாதிபதியின் பதவிக்கு ஆபத்து: மறைக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்ட கம்மன்பில

பதவியில் இருந்து நீக்க வேண்டும்

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என உதய கம்மன்பில (Udaya Gammanpila) எச்சரித்துள்ளார்.

அடிபணிய மாட்டோம்..! கம்மன்பிலவுக்கு அநுர அரசு அதிரடி பதிலடி | Easter Sunday Attacks Report Adk Gov

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் நேற்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் பதிலளிக்கையிலேயே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சாகல ரத்னாயக்கவின் தனிப்பட்ட தேவைக்காக நியமிக்கப்பட்ட ஏ. என். ஜே. தி அல்விஸ் அறிக்கையை எங்களால் ஏற்று கொள்ளவும் முடியாது என்றும் எவரையும் பணி நீக்கம் செய்ய மாட்டோம் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை உதய கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கால அவகாசம் நாளையுடன் நிறைவு....! அநுரவிற்கு கம்மன்பில எச்சரிக்கை

கால அவகாசம் நாளையுடன் நிறைவு....! அநுரவிற்கு கம்மன்பில எச்சரிக்கை

வெளியான அறிக்கை...! கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த கோரிக்கை

வெளியான அறிக்கை...! கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026