உயிர்த்தஞாயிறு தாக்குதல் : தமிழர் தாயகத்தில் கண்ணீர் மல்க உறவுகள் நினைவேந்தல்
இலங்கையை (sri lanka)உலுக்கிய உயிர்த்தஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் ஆறாவது ஆண்டு நிகழ்வு இன்றையதினம் உறவினர்களின் நினைவேந்தலுடன் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றது.
இதன்படி மட்டக்களப்பு(batticaloa) சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளுக்கான நினைவஞ்சலி ஆராதனைகள் உயிரிழந்த உறவுகள் கண்ணீர் மல்க நினைவேந்தலில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நினைவேந்தல்
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் வழிபாடு ஆராதனைகள் ஆலய பிரதம போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது
ஆலய வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குண்டு வெடித்த சீயோன் தேவாலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் உருவப்படங்கள் அஞ்சலிக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன இந்த ஆராதனை வழிபாடுகளில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் நினைவஞ்சலி
இதேவேளை ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று யாழ்ப்பாணம்(jaffna) பெரிய கோவிலில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குத்தந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவயவங்களை இழந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து மெளன அஞ்சலி, சுடரேற்றல், மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது.இதன்போது விசேட அதிரடிப்படை மற்றும் காவல்துறையினர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.நிகழ்வில் பங்குத் தந்தைகள், பாதிரியார்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





