கத்தோலிக்க மதகுமாரின் கைகளில் ஈஸ்டர் தாக்குதல் இரகசிய அறிக்கை
உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரகசியதகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்று சில தரப்பினரால் கத்தோலிக்க மதகுருமாருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள கத்தோலிக்க தேவாலய மதகுருமாருக்கே குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக உரிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்குமாயின் அதனை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதானியினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சுமார் 703 பேர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து சிஐடி மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.