தமிழரசுக் கட்சிக்குள் தலைதூக்கி இருக்கும் பிரதேசவாத அரசியல்: அம்பலமாகும் உண்மைகள்
தமிழரசுக் கட்சியின் வடக்கு அரசியல் தலைமைகளினால் தமிழரசுக் கட்சியின் கிழக்கு தலைமைகள் புறக்கணிக்கப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் (P. Arianethran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசியத்தை ஆதரிக்க கூடிய அரசியல் தலைமைகள் கிழக்கில் இருந்தாலும் அவர்களை விஸ்தரிப்பதற்கான வாய்ப்பு அங்கு இல்லாமல் உள்ளது.
தமிழரசுக் கட்சியில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டால் கட்சியின் உப விதியில் இருப்பது போல ஒருவர் அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்படலாம் அல்லது மத்தியக் குழு இணைந்து ஒருவரை நியமிக்கலாம் என தற்போதைய கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C.V.K Sivagnanam) தெரிவித்திருந்தார்.
இருப்பினும், மத்தியக்குழு முடிவெடுத்தால் அது அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு ஆதரவாக அமையும் என்பதால் தமிழரசுக் கட்சி தொடர்ந்து பூசி மொழுகி வருகின்றது.
தமிழரசுக் கட்சியின் முன்னாள் பதில் செயலாளர் பா.சத்தியலிங்கம் (P. Sathyalingam) பதவி விலகுவதாக அறிவித்த போது, அவருக்கு நான் ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன்.
குறித்த கடித்தத்தில், “கட்சிக்கு அடுத்த வழக்கு சென்றுள்ள நிலையில், பொதுச்சபை கூட்டி மாநாடு நடத்தும் வரை நீங்கள் விலக கூடாது.
அவ்வாறு நீங்கள் விலகினால் அந்த பதவிக்கு மட்டக்களப்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்” என நான் தெரிவித்திருந்தேன்.
இவ்வாறு நான் அனுப்பிய கடிதம் இன்றும் தன்னிடம் உள்ள நிலையில், அதற்கான எவ்வித பதிலும் தனக்கு கிடைக்கவில்லை.
இதனடிப்படையில் திட்டமிட்டு இங்கு கிழக்கு தரப்பு தலைமைகள் புறக்கணிக்கப்படுவது புலப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கிழக்கு தலைமைகளின் தொடர் புறக்கணிப்புக்கான காரணம், கட்சிக்குள் தொடர் மோதல்களின் பின்னணி, தமிழரசுக் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை, தமிழ் மக்களுக்கு கட்சி மீதான நிலைப்பாடு மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் பா. அரியநேத்திரன் தெரிவித்த மேலதிக விவரங்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
