கிழக்கில் உடன் நடைமுறைக்கு வரும் ரணிலின் உத்தரவு

Batticaloa Trincomalee Sri Lanka Tourism Sri Lanka Sri Lanka Development
By Beulah May 30, 2023 09:18 AM GMT
Report

கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை தயாரிக்கும் போது சுற்றுலா, மீன்பிடி, கைத்தொழில் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று (29) நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதன்போது, கிழக்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய அமைச்சர், அதன் இறுதி மதிப்பாய்வுப் பணிகளை ஜூன் மாதம் ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ரணிலின் பணிப்புரை

கிழக்கில் உடன் நடைமுறைக்கு வரும் ரணிலின் உத்தரவு | Eastern Metropolitan Project Sl Development

அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையிலேயே, இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர்,

“நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனையின் பேரில் சிங்கப்பூரின் நகர வடிவமைப்பு நிறுவனம் கிழக்குப் பெருநகர வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்து வருகிறது. இதன்போது முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் இத்திட்டம் தயாரிக்கப்படும்.இதன் கீழ் இம்மாவட்டங்கள் பொருளாதார, வர்த்தக, கலாச்சார மற்றும் சுற்றாடல் ரீதியாக அபிவிருத்தி செய்யப்படும்.

இங்கு, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. எனவே, தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப இந்த அபிவிருத்தித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.

அதன் மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு, நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த அபிவிருத்தித் திட்டத்தை வர்த்தமானி மூலம் வெளியிடும்” என தெரிவித்திருந்தார்.

சுற்றுச்சூழல் சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி

கிழக்கில் உடன் நடைமுறைக்கு வரும் ரணிலின் உத்தரவு | Eastern Metropolitan Project Sl Development

இச்செயற்றிட்டத்தின் ஊடாக கிழக்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி மற்றும் நிலாவெளி பகுதிகள் கடல் மற்றும் சூழல் சுற்றுலா வலயங்களாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல் மற்றும் பாசிக்குடா பகுதிகள் மீன்பிடி மற்றும் சுற்றுலா வலயங்களாகவும், அம்பாறை மாவட்டத்தில் கோமாரி முதல் பானம வரையான பகுதிகள் கடலோர சுற்றுச்சூழல் சுற்றுலா வலயங்களாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

அத்துடன், கிண்ணியா மீன்பிடி கைத்தொழில் நகரமாகவும், புல்மோட்டை நகரம் கனிம கைத்தொழில் நகரமாகவும், மூதூர் நகரம் பசுமை சக்தி நகரமாகவும் அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016