உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவு குழுவுடனான விசாரணை அவசியம்

Sri Lanka Easter Attack Sri Lanka
By Beulah Sep 13, 2023 01:11 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அதிபரின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆஷுமாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அமைச்சர்களுக்கு தெரியும்: மற்றுமொரு அதிர்ச்சி தகவல் (காணொளி)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அமைச்சர்களுக்கு தெரியும்: மற்றுமொரு அதிர்ச்சி தகவல் (காணொளி)

உள்நாட்டு விசாரணை

“தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாட்டுக்குள்ளேயே விசாரணை மேற்கொண்டு தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவு குழுவுடனான விசாரணை அவசியம் | Eater Attack Channel 4 Documentary Update

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சனல்4 அலைவரிசை வெளிப்படுத்தி இருக்கும் காணொளி தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் அதிபர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக தேடிப்பார்க்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றை நியமித்திருக்கிறார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று அமைத்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று முன்னான் அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிபர் ஆணைக்குழுவொன்றையும் அமைத்திருந்தார்.

இந்த இரண்டு அறிக்கைகளுடன் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சனல்4 வெளியிட்டிருக்கும் காணொளி தொடர்பாக தேடிப்பார்க்க அதிபர் அமைத்திருக்கும் குழு மற்றும் புதிதாக அமைக்க இருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆகியவை விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தால் மொத்தமாக 4 அறிக்கைகள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

இந்த 4 அறிக்கைகளிலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் தொடர்பாக ஆராயந்து நாடாளுமன்றம் இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்தும் காலம் தாழ்த்தாமல் இந்த குழுக்கள் விரைவாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

யார் அந்த சூத்திரதாரி

அதேபோன்று முன்னாள் சட்டமா அதிபர் தப்புல லிவேரா, இந்த தாக்குதலின் பின்னணியில் சூத்திரதாரி ஒருவர் இருக்கிறார் என தெரிவித்திருப்பதன் பிரகாரம், அந்த சூத்திரதாரி யார் என்பது தொடர்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிக்க முடியும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவு குழுவுடனான விசாரணை அவசியம் | Eater Attack Channel 4 Documentary Update

இது ஒட்டுமொத்த நாடும் தெரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்.

அத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு முன்னாள் அதிகாரிகள் இதற்கு முன்னர் இடம்பெற்ற நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் அளித்துள்ளனர்.

என்றாலும் அவர்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்க இருந்தால் அமைக்க இருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க முடியும்.

நல்லாட்சி அரசாங்கம் தோல்வியடைய பிரதான காரணம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலாகும்.

அதனால் இந்த தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டிய தேவை எமக்கும் இருக்கிறது.

அதனால் தொடர்ந்தும் இந்த விசாரணைகளை இழுத்தடித்துக்கொண்டிருக்க முடியாது.

விரைவான தீர்மானம்

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றுக்கு செல்லவேண்டும் என பேராயர் மல்கம் ரன்ஜித் ஆண்டகை உட்பட பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவு குழுவுடனான விசாரணை அவசியம் | Eater Attack Channel 4 Documentary Update

நாட்டுக்குள்ளே விசாரணை மேற்கொண்டு தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

அதனால் பேராயர் உட்பட தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பும் அனைவரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

அதேநேரம் விசாரணைகளை விரைவாக மேற்கொண்டு அதன் அறிக்கைகளை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்து, இது தொடர்பாக நாடாளுமன்றம் விரைவாக தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இலங்கைக்கு இறுகும் நெருக்கடி : ஜெனிவாவில் இருந்து வெளியான அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இலங்கைக்கு இறுகும் நெருக்கடி : ஜெனிவாவில் இருந்து வெளியான அறிவிப்பு

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011