பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளவுள்ள இலங்கை: வெளியான மகிழ்ச்சியான தகவல்
இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக வங்குரோத்து நிலையிலிருக்கும் இலங்கையின் (Sri Lanka) இந்த நிலை முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய, எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தினால் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடி
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதியன்று, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதமையால் வங்குரோத்து நிலை அடைந்த நாடாக அறிவிக்கப்பட்டது.
இலங்கைக்கு மூன்றாவது கடன் தொகை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னேற்றம் குறித்து சர்வதேச நாணய நிதிய (IMF) பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.
இதற்கமைய வாங்குரோத்து நிலையை இல்லாமல் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |