வெனிசுலாவில் வலுக்கும் பதற்றம்! அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு
வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு நிலை மோசமடைந்துள்ளதையும், அவசர உதவி வழங்க அமெரிக்க அரசால் இயலாத நிலையையும் காரணமாக வைத்து அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதம் தாங்கிய குழுக்கள்
சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அறிவிப்பில், “வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று கராகஸ் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Image Credit: Telemundo
இந்த எச்சரிக்கை, வெனிசுவேலா சாலைகளில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் செயல்படுவதாக வந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விடுக்கப்பட்டுள்ளது.
கொலெக்டிவோஸ் (Colectivos) என அழைக்கப்படும் ஆயுதம் தாங்கிய மிலீஷியா குழுக்கள் சாலைகளில் தடுப்புகளை அமைத்து, வாகனங்களை நிறுத்தி, அமெரிக்க குடியுரிமை அல்லது அமெரிக்காவுக்கு ஆதரவு உள்ளதற்கான ஆதாரங்களைத் தேடி சோதனை நடத்துகின்றன என கராகஸ் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
விமான சேவைகள்
சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Image Credit: The New York Times
சர்வதேச விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதால், வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை, வெனிசுவேலாவை தொடர்ந்து அதன் உயர்ந்த பயண எச்சரிக்கை நிலையான ‘நிலை 4 – பயணம் செய்ய வேண்டாம்’ பட்டியலில் வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |