யு.எஸ் தாக்குதல் எதிரொலி! தென்னாபிரிக்காவில் நிலைக்கொண்டுள்ள பிரிக்ஸ் போர் கப்பல்கள்
ரஷ்யா, ஈரான், சீனா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்த ஒரு வார கால கடற்படைப் பயிற்சிகளை அத்தியாவசியமானது என்று தென்னாப்பிரிக்கா கூறியுள்ளது.
மேலும் தென்னாப்பிரிக்க கடற்கரையை இலக்காக கொண்ட உலகளவில் அதிகரித்து வரும் கடல்சார் பதட்டங்களுக்கு ஒரு முக்கிய பிரதிபலிப்பாக குறித்த பயிற்சி அமையும் என தென்னாப்பிரிக்கா விவரித்துள்ளது.
இதன்படி இன்று அந்நாட்டின் கேப் டவுன் கடற்கரையில் தொடங்கிய “அமைதிக்கான விருப்பம் 2026” என்ற இராணுவ பயிற்சிகள், மேற்கத்திய தடைகளை மீறியதாகக் கூறி, வடக்கு அட்லாண்டிக்கில் வெனிசுலாவுடன் இணைக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் டேங்கரை அமெரிக்கா கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கும் சீனா, ஈரான், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல பிரிக்ஸ் பிளஸ் நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் இந்த கடற்படைப் பயிற்சிகள் நடைபெறுகின்றன.

இந்தப் பயிற்சிகள் "கப்பல் பாதைகள் மற்றும் கடல்சார் பொருளாதார நடவடிக்கைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ், பின்னர் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாக தற்போது விரிவடைந்துள்ளது.
உறுப்பு நாடு
இந்த வார கடற்படைப் பயிற்சிகளுக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சீனாவும் ஈரானும் தென்னாப்பிரிக்காவிற்கு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன. ரஷ்யாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் கொர்வெட் கப்பல்களை அனுப்பியுள்ளன. தென்னாப்பிரிக்கா ஒரு போர்க்கப்பலை அனுப்பியுள்ளது.
மேலும், இந்தோனேசியா, எத்தியோப்பியா மற்றும் பிரேசில் ஆகியவை பார்வையாளர்களாக இணைந்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |